முகப்பு Sites யாபகுவ

யாபகுவ

மகோ பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்த யாபகுவை தொல்லியல் இடம் வரலாற்றுமிக்க விசேட இடம் பெற்றுள்ளது. கி.மு. 3 வது நூற்றாண்டில் தெவன பேதிஸ் எனும் அரசனின் ஆட்சி காலத்தில் யாபகுவையை "சுந்தர கிரி பவ்வ" எனும் பெயரிலும் அழைக்கப்பட்டதாக போதிவம்ஸ எனும் நூலில் குறிப்பிடுகின்றது. யாபகுவயை சுப எனும் சேனாதிபதியால் பாதுகாப்பிற்காக கோட்டை ஒன்று கட்டிய பின் சுஹவால, சுஹகிரிபுர எனும் பெயர்களிலும் அறிமுகம் செய்துள்ளது. தலதா பூஜாவலிய எனும் நூலில் "அயோபர்வத" எனும் பெயரிலும் அறிமுகப்படுத்தியுள்ளது.

யாபகுவயில் தொல்லியல் பெறுமதி வாய்ந்த தடயங்கள் அனேகம் உள்ளது. பாறையின் தெற்கு பக்கத்தில் கிழக்கு மூலையில் ஆரம்பிக்கும் மதிலும் நீர் அகழியும் குதிரை லாடத்தின் வடிவம் கொண்டு மறுபக்க பாறையுடன் சம்பந்தமாகின்றது. வெளி நகரத்தில் முக்கிய கட்டிடங்கள் எதுவும் இல்லை. ஓடுகளும் மட்பாண்ட சிதைவுகளும்,  செங்கட்டிகளும் வெளி நகரம் பூராகவும் பரவி உள்ளது. மதில் 4 மீட்டர் அளவு ஆகுமிடையில் அகலம் 22 மீட்டர் அளவாகும். இதன் மேலுள்ள சதுரமான அறைகள் காவல் அறைகளாக இருந்திருக்கலாம்.

மதிலினாலும் நீர் அகழியாலும் சுற்றியுள்ள உள் நகரம் திட்டமிட்டு ஆயத்தம் செய்துள்ளது. மதிலின் வெளிப்புறம் கற் பலகைகள் கட்டி அதன் நடுப்பகுதி சக்க எனும் கல்லினால் நிரப்பி ஆயத்தம் செய்துள்ளது. உள் நகரத்தில் சேரும் நீரை அகழிக்கு கொண்டு செல்வதற்காக கல்லினால் செய்த இரண்டு கால்வாய்கள் உள்ளது. படிக்கட்டுகளின் ஆரம்பத்திலுள்ள சதுரமான கட்டிடப் பாதம் சபை மண்டபமாக அறிமுகப்படுத்தினாலும் அதற்கான தடயங்கள் எதுவும் இல்லை. இந்த கட்டிடத்திற்கு உட்பிரவேசிப்பதற்கு மூன்று படிக்கட்டுகள் சம்பந்தப்படுத்தியுள்ளது. கட்டிடத்தின் உட்புற சுவர்களின் மூலைகளில் கற் தூண்கள் அமைத்துள்ளது. நடுப்பகுதியில் தூண்கள் இல்லை. ஆரச மாளிகையாக அறிமுகப்படுத்தும் கட்டிட அத்திவாரம் சதுர வடிவமுள்ள மேடையாக காட்சியளிக்கின்றது. கட்டிட அத்திவாரத்துடனான படிக்கட்டுடன் கைப்பிடி கற்கள் இரண்டும் உள்ளது. சபைச் சாலை என அறிமுகப்படுத்தும் கட்டிடத்திற்கு கிழக்கு பக்கமாக நீள் சதுரமான அத்திவாரம் ஒன்று இருக்கின்றது. இதன் அளவு 66.30 மீட்டர் நீளமும் 6.60 மீட்டர் அகலமுமாகும்.

யாபகுவையின் புரான ஆக்கங்களுக்குள் படிக்கட்டு மிக முக்கியமானதாகும். இறக்கமான பூமியில் நான்கு மாடி செய்து தலதா மாளிகைக்கு பிரவேசிப்பதற்கு அதை அண்மித்து படிக்கட்டுகள் நிர்மானித்துள்ளது. முதல் மாடிக்கு பிரவேசிப்பதற்கு 24 படிகள் ஏற வேண்டும். இங்கு 14 படிக்கட்டுகள் ஏறிய பின் ஓய்வாக இருப்பதற்கு அகன்ற படியொன்று உள்ளது. முதல் மாடியிலிருந்து இரண்டாவது மாடிக்கு போவதற்கு சரிவான படிக்கட்டில் போக வேண்டும். அதில் 65 படிக்கட்டுகள் உள்ளது. அதன் கைப்பிடிகளுக்காக சிறிதளவான பெட்டிகள் நிர்மானித்துள்ளது. அதன் பின் சதுரமான மேடைக்கு பிரவேசிக்க முடியும். சதுரமான மேடை உள்ள மாடியை தலதா மாளிகையாக அறிமுகமாகின்றது. அத்தோடு அழகான படிக்கட்டுகலுள்ள பிரவேசிக்கும் மண்டபமும் உள்ளது. இந்த படிக்கட்டுகள் உயர்ந்த ரக சிற்பங்களோடு வர்ணங்கள் தீட்டி இருந்ததற்கான தடயங்களும் இருக்கின்றது. இந்தக் கட்டிடக்கலை அம்சங்கள் இந்திய கட்டிடக்கலை அம்சங்களுக்கு சமமாக உள்ளது. படிக்கட்டுகள் இரு புரமும் உயர்ந்த சிற்பங்களாகவும் ஒரே மாதிரியாகவும் இருக்கின்றது. குள்ளர்களின் உருவங்கள் நடனக்காரியின் உருவம் இளம் யுவதிகளின் தோற்றம் கொண்ட அழகான சிற்பங்களால் அடங்கியுள்ளது. அதன் பின் கைப்பிடியாக பாவிக்கப்படும் கல்லிலான படிக்கட்டுடனான கைப்படிக் கல்லாகும். இந்த கைப்பிடி கல்லிற்கு மேல் குந்திக்கொணடு இருக்கும் இரண்டு சிங்கங்களின் உருவங்கள் செதுக்கியுள்ளது. இந்த படிக்கட்டின் இரண்டாவது பகுதியில் குள்ளர்களின் உருவங்களும் அறைவாசி சிங்கத்தினதும் அறைவாசி யானையினதும் சேர்த்தால் போல் உருவங்கள் சிற்பமாக செய்துள்ளது. உயரத்தில் உள்ள மாடியில் அமைந்த நுழை மண்டபத்தில் கீழ்ப்பகுதி அழகான வேலைப்பாடுகள் உடையதாகவும் நடுப்பகுதியில் நடனங்களில் ஈடுபடுகின்ற பெண்களினதும் ஆண்களினதும், இசைக் கருவிகள் இயக்குபவர்களையும் செதுக்கியுள்ளது. மண்டபத்தின் முன் தோற்றத்தில் அழகான தூண்கள் காண முடியும். பிரவேசிக்கும் பாதையில் நடுப்பகுதியில் விதவிதமான சிற்பங்கள் கொண்ட கல்லிலான கதவு நிலை உள்ளது.

நுழை வாசல்கள் உள்ள மண்டபத்திற்கு பின் தலதா மாளிகை என அறிமுகம் செய்யும் அத்திவாரம் கிடைக்கின்றது. பாறையின் உச்சியில்  தூபியொன்று, சிறிய குளங்கள், கல்லிலான குமுழிகள், நெழிவுகள் உள்ள மதில்கள், பாறையில் செதுக்கிய படிக்கட்டுகள் போன்றவை காணலாம். யாபகுவையை அண்மித்து 40 குகைகள் காணக் கிடைக்கின்றது. அவைகளில் 25 நீர்வடி வெட்டப்பட்டவையாகும். நீர்வடி வெட்டப்பட்ட சில குகைகளில் கல்வெட்டுகளும் செதுக்கியுள்ளது.